வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

தேவர்

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்புதேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
அதில் ஒரு சிலபெண்கள் கிணற்றுக்கு அருகில் வராமல் தங்கள் குடங்களுடன் கொஞ்சம் தள்ளி தனியே நின்று கொண்டிருக்க அந்த செல்வந்தரின் மகனான சிறுவன்தான் இறைத்து அந்த பெண்களுக்கு நடந்து போய் ஊற்றிகொண்டிருந்தார். எதனால் இப்படி அந்த பெண்களையே எடுத்துகொள்ள சொல்லலாமே என்று தேவர் தன் நண்பரிடம் கேட்க அதற்கு அவர் இவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைசேர்ந்த பெண்கள் எனவே அவர்கள் இந்தகிணற்றில் தண்ணீர் பிடித்தால் தீட்டாகிவிடும், மற்ற யாரும் தண்ணீர் பிடிக்கமாட்டார்கள், அதனால் தான் இந்த ஏற்பாடு என்றார்.
உடனே தேவர் கூறினார் சரி நான் கிளம்புகிறேன், இனிமேல் இங்கு வரவும் மாட்டேன், இப்போது இங்கே விருந்தும் உண்ணபோவதில்லை, தாழ்த்தப்பட்ட பெண்களு
ம் மனிதர்கள்தானே அவர்களை இந்தநிலையில் வைத்திருக்கும் இடத்தில் என்னால் கைநனைக்க என் மனம் இடம் தரவில்லை என்று கூறினார்.
உடனே அந்த நண்பர் பதறிபோய், ஐயா மன்னித்துவிடுங்கள் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது, இப்பொழுதே அவர்களை எடுக்க சொல்கிறேன் என்று கூறி அந்தப்பெண்களை உடனே கிணற்றில் தாங்களாகவே தண்ணீர் பிடித்துக்கொள்ள அனுமதி அளித்தார்.
பின்பு தேவரும் விருந்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். அன்றிலிருந்துஅந்தவீட்டில் உயர்ஜாதி மக்களை போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கபட்டார்கள்.
குறிப்பு: இந்தசம்பவத்தில் வரும் தேவரின் நண்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களுடைய தந்தை ஆவார். தண்ணீர் இறைத்துக் கொடுத்த அந்த சிறுவன்தான் திரு. தா.பாண்டியன் அவர்கள். இதை தா.பா அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னார்.