வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்


பரமக்குடியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம் அனுசரிக்கப்படும் குருபூஜையை ஒட்டி நடந்த வன்முறையில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். 

கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி நடந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இம்முறை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காவல்துறை நடவடிக்கையால் கொல்லப்படவில்லை. தலித்துகளால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்
. கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு நடந்த தேவர் குரு பூஜையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட்டு அமைதியான முறையில் அவ்விழா நடந்தேறியது.

இம்முறை இமானுவேல் சேகரன் நினைவு நாளின்போது, வன்முறையை எதிர்ப்பார்த்து காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்ட நிலையில் தேவர் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறை பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.

தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு 13 பேரை ஏற்றிச் சென்று திரும்பிய வேன் ஒன்று தலித்துகள் அதிகம் குடியிருக்கும் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துள்ளது. அந்த வாகனம் நுழையும் முன்பே, கிராம நிர்வாக அலுவலர், அவ்வழியே செல்ல வேண்டாம் என்றுதடுத்துள்ளார். ஆனால், யாரோ ஒருவரை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், கிராம நிர்வாக அலுவலரின் எச்சரிக்கையையும் மீறி அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளனர். அடுத்த கிராமத்துக்குள் நுழைந்தபோது, அந்த கிராமத்தினர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளனர். வேன் டிரைவர் அதையும் மீறி உள்ளே சென்றுள்ளார். மூன்றாவதாக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது அந்த வேன் கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. வேனில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பி ஓடியுள்ளனர். வேனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேன் டிரைவர் வேனோடு தப்பிக்க முயன்றபோது அங்கிருந்த கும்பல், அந்த வேன் டிரைவரை கல்லாலும், உருட்டுக்கட்டைகளாலும் தாக்கியதில் விருதுநகர் மாவட்டம் வேலாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற டிரைவர் அந்த இடத்திலேயே இறந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் மாலைக்கண்ணன் என்ற இளைஞர்கள் இதே போல வழி தவறி, தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் பொன்னையாபுரம் என்ற கிராமத்துக்குள் இரு சக்கர வாகனத்தில் நுழைந்தபோது, அவர்கள் இருவரையும் வழி மறித்த கூட்டம், அவர்களையும் அடித்தே கொன்றிருக்கிறது.

அன்று இரவே, மதுரைக்கு அருகே தேவர் குரு பூஜைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் ஒன்றை வழிமறித்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் நடந்த வன்முறையில், தலித்துகள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 40 பேரைக் கொண்ட தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள், முதல் நாள் நடந்த சம்பவத்துக்கு பழி வாங்கும் வகையில் காட்டுக்குள் விறகு வெட்டிக் கொண்டிருந்த குலாளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர், கருப்பன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். அணைக்குளம் பகுதியில், இதே போல நடந்த தாக்குதலில் சரவணன், முத்துமாரி, பூமி, வடுகன் மற்றும் கருப்பையா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

நடந்த இந்த சம்பவங்கள் மனசாட்சி உள்ளோர் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதில் இரு வேறு கருத்து இருக்கவே முடியாது. வழி தவறி வந்த ஒரு வேன் ட்ரைவரை கல்லாலும், கட்டையாலும் அடிப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? இரு சக்கர வாகனத்தில் வழி தவறி வந்தவர்களை கல்லால் அடித்துக் கொல்பவர்களை மன்னிக்க முடியுமா ? வேனில் வந்தவர்களை கல்லால் அடித்து வழி மறித்து, அந்த வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றுபவர்களை மிருகங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும் ?

இந்தப் படுகொலைகளை கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும் ? இந்த வன்முறைச் சம்பவங்களை மார்க்சிஸ்ட் கட்சியும், மறுமலர்ச்சி திமுகவும் மட்டுமே கண்டித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பரமக்குடியில் காவல்துறையினரால் 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டனக் குரல்கள் தற்போது நடந்துள்ள இந்த வன்முறைகளைக் கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.. சாதி என்னவாக இருந்தாலும் பலியானது மனித உயிர்கள்தானே… ? இந்த வன்முறைகளை மற்ற எல்லோரையும் விட முதலில் கண்டித்திருக்க வேண்டியது தலித் கட்சிகளே… விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் புதிய தமிழகத்தின் தலைவர் இதை முழு மனதோடு கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்காமல் விட்டது மிக மிக வருந்தத்தக்கது. செனாய் நகர் 13வது தெருவில் குப்பை வாராமல் இருந்தால் கூட கருத்து சொல்லும் கருணாநிதி இவ்விவகாரத்தில் கனத்த மவுனத்தைக் கடைபிடிக்கிறார்.

அரசியல் அமைப்புக்களைத் தாண்டி, மற்ற மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இந்த வன்முறையை முழு மனதோடு கண்டிக்காதது வருந்தத்தக்கது...தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...எங்கள் vote ர்காக மட்டும் எங்களை தேடும் தமிழ்நாடு இன அரசியல் கட்சிகளை அனைத்து முக்குலத்தோர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.....