புதுடில்லி: "எஸ்.டி., - எஸ்.டி., பிரிவினர் மீதான அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, யாரையும், இனிமேல் சிறைக்கு அனுப்ப முடியாது. பொது இடத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரை, ஜாதியை சொல்லி, திட்டினால் தான், அந்த சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்
ய முடியும்' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவரை (எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,), அவர்களின் ஜாதியை குறிப்பிட்டு திட்டுவது, தண்டனைக்குரிய குற்றம். வரவேற்கத்தக்க இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை புரிந்து கொள்ளாத, அந்த சமுதாயங்களை சேர்ந்த சிலர், எஸ்.டி., - எஸ்.டி., பிரிவினர் மீதான, அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக கூறப்படுகிறது.அத்தகைய செயல்கள் இனிமேல் நடக்காத வண்ணம், டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட், நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.சி., பிரிவை சேர்ந்த ஒருவரை, மற்றொரு ஜாதியை சேர்ந்த குடும்பத்தினர், ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக, டில்லி, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ரஜினிஷ் பட்நாகர் நேற்று பிறப்பித்த உத்தரவு:எஸ்.டி., - எஸ்.டி., பிரிவினர் மீதான, அத்துமீறல்கள் தடுப்புச் சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். நான்கு பேர் மத்தியில், பொதுவான இடத்தில், பிறர் அறியும் வகையில், ஜாதி பெயரை சொல்லி, திட்டினால் தான், எஸ்.டி., - எஸ்.டி., பிரிவினர் மீதான, அத்து மீறல் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த முடியும்.இதற்கான சட்ட அம்சம், இந்த சட்டத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சம்பவம் நடந்த போது, புகார் தெரிவித்தவரும், புகாருக்கு ஆளானவர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவம், பொது இடத்தில் நடக்கவில்லை.அவர்களுக்கு இடையே, என்ன வாக்குவாதம் நடந்தது என்பதற்கான முழு விவரம் இல்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான, எஸ்.டி., - எஸ்.டி., பிரிவினர் அத்துமீறல் தடுப்புச் சட்டத்தை, இந்த வழக்கில் பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர், தாக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கை நடத்தலாம்.இவ்வாறு, நீதிபதி, தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment